காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்றபோது, அவர் மீது லேசர் ஒளி பாய்ந்ததாக காங்கிரஸ் கட்சி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேதியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்றபோது, லேசர் ஒளி பாய்ந்த்ததாகவும், லேசர் துப்பாக்கிமூலம் அவர் குறி வைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பாதுகாப்புப் படை வளையத்தில் உள்ள ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர கடைபிடிக்கப்பட வில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தை ராஜிவ் காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் இந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, ராகுல்காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவித குறைபாடும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.