அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரவு விடுதியில் நடந்த அந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 4 பேர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் பலியானதுடன் மற்றவரின் நிலை மோசமாக உள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டது அல்ல என்று தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பொலிஸார், மோட்டார் சைக்கிள் கும்பல்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.
துப்பாக்கிகள் தொடர்பான கடும் சட்டங்கள் அமுலில் உள்ள அவுஸ்திரேலியாவில் இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் ஏற்படுவது அரிதானது என்பதும் குறிப்பிடத்தக்கது.