தற்சமயம் ஆப்கானிஸ்தானில் நிலவும் தாலிபான் ஆட்சியினால் இலங்கை அரசாங்கம் ஆப்கானிஸ்தான் வாழ் இலங்கையர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 86 பேரில் 46 பேர் இவ்வாறு மீட்டெடுக்கப்பட்டனர் என இலங்கை வெளியுறவு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 40 பேரில் 20 பேர் தாங்கள் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கீழ் வாழ தயார் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீதம் உள்ள 20 பேரை மீட்டெடுக்க இலங்கை வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சு ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் உதவி கோரியுள்ளது.