ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையம் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தாலிபான்களின் ஆட்சிக்கு கீழ் ஆப்கானிஸ்தானில் வாழ விருப்பம் இன்றி அமெரிக்க படைகளின் உதவியுடன் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்கள் சாரை சாரையாக வெளியேறிக்கொண்டு இருக்கையில் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்து ஜெர்மனிக்கு பறந்த பெண்ணுக்கு நடு வானில் குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க விமானப்படை தெரிவிக்கையில் "28000 அடி (8534 மீட்டர்) உயரத்தில் பறக்கும் போது காற்றழுத்தம் குறைவாக இருந்ததில் அத்தாய்க்கு பிரசவவழி ஏற்பட்ட நொடி விமான தளபதி விமானம் பறக்கும் உயரத்தை குறைத்து காற்றழுத்தத்தை சீராக்கி அத்தாயின் உயிரை காப்பாற்றியுள்ளார்" என கூறியிருந்தது.
இவ்விமானம் ரம்ஸ்டைன் தளத்தை அடைந்தவுடன் 86வது விமானப்படையின் வைத்தியக் குழு பிரசவத்தின் போது உதவி தாயும் சேயும் மருத்துவ வசதியுள்ள இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். பெண் குழந்தையும் தாயும் நலம் என தெரிவிக்கப்பட்டது.