நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இந்து கலாச்சாரத்தில் மறைந்துள்ள ஆழமான உள் அர்த்தங்கள்???
1.கைகூப்பி வணக்கம் சொல்வது ஏன்?
* கைகூப்பி வணக்கம் சொல்லும் போது இரு கைகளும் இணைகிறது அதனால் கைகளிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்புகள் ஒன்றாகும் போது மூளை நாம் வணக்கம் சொல்லும் நபரை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதை வழக்கப்படுத்திக் கொள்கிறது.
2.தண்ணீரில் நாணயம் போடுவது ஏன்?
* நம் உடலிற்கு செப்பு அவசியமான ஒரு ஊட்டச்சத்தாகும். இதனை நாம் தண்ணீரில் மட்டுமே பெற்றுக்கொள்ளலாம். எனவே தான் தண்ணீரில் செப்பு நாணயங்களை போடுகின்றோம்.
3.பொண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்?
* முழு உடலையும் ஆளும் நெற்றியின் அந்த அழுத்த புள்ளியில் பொட்டு வைப்பதால் நம் மனம் ஒருநிலை அடையும். நமக்கு கிரகிக்கும் ஆற்றல், அவதானிக்கும் திறன் அதிகரிக்கும். இதனாலே பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கின்றனர்.
4. கோவில் மூலஸ்தானத்தில் மணி அடிப்பது ஏன்?
* மூலஸ்தானம் போக முதல் நாம் மணி அடிப்பது வழக்கம். ஆனால் நம்மில் யாருக்குமே அதன் விஞ்ஞான நன்மை தெரியாது. நம் வழக்கில் மணியடித்தால் பேய் ஓடிவிடும் என்று கூறுவதுண்டு ஆனால் உண்மையில் அந்த மணி சத்தம் கிட்டத்தட்ட 7வினாடி கேட்குமாம் அதனால் எங்கள் மனதில் உள்ள எதிர் மறை சிந்தனைகள் எல்லாம் நேர் மறை சிந்தனைகளாக மாறி ஒரு நிலையடைந்த மனம் மற்றும் கடவுளை மட்டும் நோக்கிய பார்வை அமையும் என்பது முன்னோரின் நம்பிக்கை.
5. நாம் உணவை காரத்தில் ஆரம்பித்து இனிப்பில் நிறைவு செய்வது ஏன்?
*யாராவது யோசித்தது உண்டா இதை பற்றி? நாம் காரத்தில் ஆரம்பித்து இனிப்பில் உணவை நிறைவு செய்வது, காரத்திலுள்ள இரசாயனங்கள் விரைவாக உணவை சமிப்பாடடையச் செய்யும். அவ்வாறு சமிப்பாடடைவது அதிகளவில் நடைபெறாது கட்டுப்படுத்த இனிப்பு இறுதியாக உட்கொள்கின்றோம்.
6. திருமணத்தின் போது மெட்டி அணிவது ஏன்?
* திருமணத்தின் போது மணபெண்ணுக்கு காலில் இரண்டாவது விரலில் மெட்டி அணிவிக்கப்படும். அதற்கு காரணம் அந்த விரலில் உள்ள நரம்பில் மெட்டி அணியும் போது அங்கு ஏற்படும் அழுத்தம் இரத்த ஓட்டத்தை சீராக்கும். வெள்ளியில் மெட்டி அணிவது உடல் நலத்தையும் பாதுகாக்கும். மற்றும் அந்த நரம்பு கருப்பையை நோக்கி நேர் மறை சக்தியை கடத்துகிறது. இதனால் கருத்தரித்தல் இலகுவாக இருக்கும்.
7.மருதாணி போடுவதால் என்ன நன்மை உண்டாகும்?
* மருதாணி ஓர் ஆயுர்வேத மருந்து. திருமணத்தின் போது மணபெண்ணுக்கு மருதாணி வைப்பது அவரின் திருமண பதற்றத்தை சீராக்கி அமைதியான மனத்துடன் சந்தோஷமாக இருக்க உதவுகிறது.
8.கீழே அமர்ந்து சாப்பிடுவது ஏன்?
* கீழே அமர்ந்து சாப்பிடுவது நற்குணங்களுள் ஒன்று. எனினும் அதன் விஞ்ஞான ரீதியான நன்மை, கீழே அமர்ந்து சாப்பிடும் போது மூளை உணவு சமிபாட்டடைய தேவையானவற்றை செய்திடுமாம். இவ்வாறு அமர்வது சுகாசனம் என அழைக்கப்படும்.
9. ஏன் வடக்கில் தலைவைத்து உறங்கக் கூடாது?
* பூமிக்கென்று ஓர் ஈர்ப்புவிசை உண்டு அதேபோல நம் உடலுக்கென்று ஓர் ஈர்ப்புவிசை உண்டு. அது இரண்டும் ஒன்றாகும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து உடலில் நோய் ஏற்படும். எனவே வடக்கில் தலைவைத்து உறங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
10.காதுக்குத்துவது ஏன்?
* தற்போதைய காலகட்டத்தில் அழகுக்காக காது குத்துகின்றோம். ஆனால் காது குத்துதல் நம் இந்து பாரம்பரியம். காது குத்துவதால் அந்த இடத்தில் உள்ள அழுத்த புள்ளி மூலம் நம் அறிவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் என்பன அதிகரிக்கும்.
11.காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது ஏன்?
* சூரிய நமஸ்காரம் செய்வதால் சூரிய கதிர்கள் நம் உடலில் பட்டு உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விட்டமின் D உடலுக்கு கிடைக்கும்.
12. பிராமணர்கள் குடுமி வைப்பது ஏன்?
* மூளைக்கு முக்கிய பகுதி அங்கு காணப்படுவதால் அதனை பாதுகாக்க அங்கு குடுமி வைக்கின்றனர்.
13. விரதம் இருப்பது ஏன்?
* நம் அன்றாட வாழ்வில் சமிப்படையாது சில உணவுகள் இறுகிடும் அதனை சமிப்பாடடைய செய்வதற்கே விரதம் இருப்பதை வழக்கப்படுத்தினர்.
உண்மையிலே நம் முன்னோர்கள் தான் பிரமாதமான விஞ்ஞானிகள். எல்லா நற்குணங்களையும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான குறிப்புக்களையும் கலாச்சாரமாக மாற்றி நம்மை கடைபிடிக்க செய்கின்றனர்.