வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் கறுப்புப் பொடி மற்றும் அம்மோனியம் நைட்ரேட்டுடன் இருவரை கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கினிகத்தேனை பஸ் நிலையத்திற்கு அருகில் கைது செய்துள்ளனர்.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த இந்த இருவரையும் கினிகத்தேன பஸ் நிலையத்திற்கு அருகில் சோதனை செய்த போது அவர்களிடம் வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் கறுப்பு பொடி மற்றும் அமோனியம் நைட்ரேட் என்பன கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அந்த பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவரில் ஒருவரிடம் 22,650 மில்லிகிராம் கறுப்பு பவுடர் மற்றும் 39,000 மில்லிகிராம் அமோனியம் நைட்ரேட் இருந்தது, மற்றைய நபரிடம் 86,680 மில்லிகிராம் கறுப்பு பவுடர் மற்றும் அம்மோனியம் நைட்ரேட் இருந்ததாக கினிகத்தேன பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் விராஜ் விதானகே தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் சந்தேக நபர்கள் இருவரையும் ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விராஜ் விதானகே மேலும் தெரிவித்தார்.