மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு எதிராக கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு வெளியே போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம், இலங்கையின் இறையாண்மை தொடர்பான விடயம் எனக் குறிப்பிட்டு டுவிட்டர் பதிவுகள் மூலம் கருத்து வெளியிடுவதற்கு சீன தூதரகத்திற்கு உள்ள உரிமை குறித்து கேள்வி எழுப்பினார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் சீனா ஆதரவளிக்காது போனால், தாம் “GoHomeChina” பிரச்சாரத்தை முன்னெடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷானகியன் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கத்தின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியவாறு சீன தூதரகத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், “ஆம், எனக்கு எதிராக முதல் தடவையாக, அதுவும் மிகவும் சக்திவாய்ந்த நாடு ஒன்றின் தூதரகத்திற்கு வெளியே கொழும்பில் போராட்டம் நடத்துவதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.