பண்டிகை காலத்தை முன்னிட்டு சில நாட்களுக்கு மின்வெட்டை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, வரும் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களில் மின்வெட்டு இருக்காது.
இதேவேளை, 2023 டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனவரி மாதத்தில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.