web log free
May 16, 2026

கட்சித் தாவத் தயாராகும் இரண்டு எம்பிக்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எம்.பி.க்களில் ஒருவர் மாவட்டத் தலைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் அமைச்சராகவும் சில காலம் பணியாற்றினார்.

இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றமடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த இரண்டு எம்.பி.க்களும் இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எவ்வித பரிசீலனையும் பெறவில்லை என்பதும் அறியப்படுகிறது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று பல்வேறு காரணங்களால் விரக்தியடைந்து எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறது. .

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd