web log free
April 18, 2026

குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ, பேத்தி ஆகியோர் இதில் அடங்குவர். 

இந்தக் குழுவினர் நேற்று முன்தினம் அதிகாலை 02.55 மணியளவில் எமிரேட்ஸ் EK-649 என்ற விமானத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறையின் ஊடாக புறப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இக்குழுவினர் முதலில் துபாய் சென்று பின்னர் அமெரிக்கா செல்வதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd