web log free
June 12, 2026

யாழில் ஐஸ் போதைப் பொருள்

யாழ்.ஆறுகால்மடம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை வில்லைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 17 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,000 போதை வில்லைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd