வட்ஸ்அப், வைபர், முகப்புத்தகம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்று ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து அப்பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நேற்று இரவு முதல் இன்று காலை 7 மணிவரை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. பின்னர், குறித்த தடை நீக்கிகொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் 21ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை அடுத்து, வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டதுடன், குறித்த தடை ஏப்ரல் 30 ஆம் திகதி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.