web log free
March 09, 2026

உள்ளாட்சி தேர்தல் குறித்த வர்த்தமானி இந்த வாரம் வெளியாகும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி இந்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

வர்த்தமானி வெளியிடப்பட்ட மூன்று நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டப்படி மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் வாக்களிப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd