web log free
December 05, 2023

லிட்ரோ கேஸ் புதிய விலை இதோ

இலங்கையில் பெட்ரோலியம் (LP) எரிவாயு வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Litro Gas Lanka, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளது.

இன்று (ஜன 05) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு: 

12.5 கிலோ சிலிண்டர் - ரூ. 4,409 (ரூ. 201 குறைக்கப்பட்டது)
5 கிலோ சிலிண்டர் - ரூ. 1,170 (ரூ. 80 குறைக்கப்பட்டது)
2.3 கிலோ சிலிண்டர் - ரூ. 822 (ரூ. 38 குறைக்கப்பட்டது)