web log free
June 19, 2026

கொலை மிரட்டல்கள் தொடர்பில் ஜனாதிபதி மீது சந்தேகம்

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மிரட்டல் விடுக்கப்பட்ட தொலைபேசி யாருடையது என்பதுதான் இப்போது தேட வேண்டியுள்ளது என்றார்.

ஜனாதிபதியின் தொலைபேசியையும் பரிசோதிக்க வேண்டும் என நினைப்பதாகவும், இரவோடு இரவாக அழைப்பு விடுக்கின்றாரா என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Last modified on Tuesday, 31 January 2023 10:40
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd