web log free
June 21, 2026

தமிழர் உரிமை பாதுகாக்கும் மாகாண சபை முறையை எதிர்க்கப்போவதில்லை - ஜேவிபி

மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்க்காணலில் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். 

அநுரகுமார மேலும் தெரிவிக்கையில்,

"மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது நாட்டில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் சிங்கள அரசியல்வாதிகளுக்கும், தமிழ் தலைமைகளுக்கும் இடையில் பேச்சு நடந்து இணக்கமான சூழலில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை மாற்றமடைந்து விட்டது. தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே மாகாண சபை முறைமை உள்ளது. ஆகவே, மாகாண சபை முறைமையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதை எதிர்க்கப் போவதில்லை" என தெரிவித்துள்ளார். 

 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd