75 ஆவது தேசிய சுதந்திர தினம் மற்றும் அதன் ஒத்திகை நடைபெறவுள்ளதால் கொழும்பில் இன்று (02) முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுதந்திர தின ஒத்திகை மற்றும் சுதந்திர தினத்தின் போது இயன்றளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் சாரதிகளுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு குறிப்பாக ஒத்திகையின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் காலையிலும், 4 ஆம் திகதியும் விசேட போக்குவரத்து ஏற்பாடு நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த வீதிகளைப் பயன்படுத்த விரும்பும் சாரதிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்படுகிறார்கள்.
கொழும்பு நகரம் முழுவதும் தேவையான போக்குவரத்து உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், உரிய மாற்றுப் பாதைகளில் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.