web log free
June 07, 2023

4000 ரூபாய் அபராதத்துடன் நடிகர் ரயன் விடுதலை

மாகந்துர மதூஸுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் வென் ரோயன், 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக, தன்வசம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டருந்தது.

மாத்தறை நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.