இன்று ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தால் அனைவரும் அச்சமடைந்துள்ளதாகவும், சாதாரண மக்கள் சிறு குழுவாக ஒன்றிணைவது உத்வேகமாக மாறியுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத அதிகாரப் பரிமாற்றம் நிச்சயம் நடக்கும் என்றும் திஸாநாயக்க குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டாலும் ஆட்சி மாற்றம் இல்லாவிட்டால் நாட்டின் முற்போக்கு இயக்கங்களின் பிழைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
ராஜபக்சவின் பங்கு முற்றாக இல்லாதொழிக்கப்படவில்லை எனவும் மொட்டு என்ற அரசியல் அமைப்பு வெடித்து பிளந்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் இத்தேர்தலில் அதிகூடிய பெறுபேறு கிடைக்கும் என்பதில் தமக்கு எந்த சந்தேகமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.