web log free
March 28, 2024

வைத்தியசாலைகளியில் மருந்து தட்டுப்பாடு உச்சத்தில்

பிரசவத்திற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள், இரத்தச் சிகிச்சை தொடர்பான மருந்துகள், அவசர சிகிச்சை மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள், கான்டாக்ட் லென்ஸ்கள் போன்றவற்றுக்கு முழு வைத்தியசாலையிலும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் தென் மாகாண இணைப்பாளருமான டொக்டர் உஹய பண்டார வரகாகொட தெரிவித்துள்ளார். 

இந்நிலைமையால் முழு வைத்தியசாலை அமைப்பும் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் உஹய பண்டார வரகாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"ஒளியியல் நிபுணர்கள் பற்றாக்குறையால், ஏழை நோயாளிகள் மற்றும் கண் மருத்துவர்களும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். ஏழை தாய், தந்தைக்கு கான்டாக்ட் லென்ஸ் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மகப்பேறு மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிக இரத்தப்போக்குக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. மருத்துவமனை அமைப்பில் உள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால், ஒட்டுமொத்த மருத்துவமனை அமைப்பும் வரலாற்றில் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளது. பொறுப்புள்ள தொழிற்சங்கமாக, இது குறித்து அதிகாரிகளிடம்  நியாயமான கோரிக்கைகளை சமர்ப்பித்தோம். ஆனால் அது பிரச்சினையாகிவிட்டது என்றார்.