web log free
June 07, 2023

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்க விசாரணைக்கு

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கை சம்பந்தமாக அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்ட ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்​கு​ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.