web log free
March 18, 2026

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதுடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவில்லை.

இதற்கமைய இதுவரை 159 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் 164 ரூபாயாகவும்132 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 135 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 134 ரூபாயாகவிருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய 136 ரூபாயாகும். 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 104 ரூபாயாக காணப்படுகின்றது.

Last modified on Monday, 09 September 2019 02:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd