2023 ஆம் கல்வியாண்டுக்குரிய பாடப்புத்தகங்களை எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மஹரகம பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றி உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதற்கமைய, ஆரம்ப வகுப்பு மற்றும் 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை பகிர்ந்தளிக்க முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், வருடாந்தம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 4.5 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், இந்த வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையினால் 45 வீதமான பாட புத்தகங்கள் அரச அச்சகத்திலும், 55 வீதமான பாடப்புத்தகங்கள் தனியார் அச்சகங்களிலும் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.