உள்ளுராட்சி மன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியில் நடைபெறாவிட்டாலும் கட்டுப்பணத்தை திரும்ப செலுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத்தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை உரிய திகதியில் நடத்துவதற்கு சாத்தியமில்லை என்ற போதிலும் அதற்காக வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தை உடன் திரும்ப செலுத்தக்கூடிய சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ரத்து செய்ய வேண்டுமாயின் அரசாங்கம் நாடாளுமன்றில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது எல்லை நிர்ணயம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் அவ்வாறு செய்தால் வேட்பு மனுக்களை இரத்து செய்ய முடியும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத்தேர்தலை தற்போதைக்கு நடத்த முடியாது என உச்ச நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் தேர்தலை நடத்தவே முடியாது என கூறவில்லை என நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.