ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
இந்த தீர்மானம் தொடர்பில் மயந்த திஸாநாயக்க, சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்ததன் பின்னர், நிதிக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து மயந்த திசாநாயக்க உத்தியோகபூர்வமாக விலகவுள்ளார்.
இதேவேளை, பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கண்டி மாவட்ட உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, பதவி விலக சம்மதிக்காததால் கட்சியில் சர்ச்சையான சூழல் உருவானது.
நிதிக்குழுவின் தலைவர் பதவிக்கு மயந்த திஸாநாயக்கவின் பெயர் ஆளும் கட்சி உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டது.
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல, குழுத் தலைவர் பதவிக்கு கட்சியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழிந்தார்.
தலைவர் பதவிக்கு மாயந்த திசாநாயக்கவின் பெயரை ஆளும் கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த போது, லக்ஷ்மன் கிரியெல்ல, திசாநாயக்கவை தொலைபேசியில் அழைத்து, பதவியை ஏற்பீர்களா எனக் கேட்டுள்ளார்.
அப்போது மயந்த திசாநாயக்க அந்த பதவியை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அந்த பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க கட்சி முன்வந்துள்ளதால், அந்த பதவியை ராஜினாமா செய்வீர்களா என கிரியெல்ல திசாநாயக்கவிடம் கேட்டதோடு, அந்த பதவியை ராஜினாமா செய்ய தாம் தயாராக இல்லை எனவும் மயந்த முன்னதாக தெரிவித்துள்ளார்.