web log free
March 19, 2026

பொதுமன்னிப்பு காலம் நீடிப்பு

இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளவர்கள் மற்றும் 21 நாட்களுக்கு மேல் விடுமுறையில் இருந்த பின்னர் பணிகளுக்கு திரும்பாதவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்துக்கான பொதுமன்னிப்பு காலம் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் மே 10ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் மே மாதம் 17 ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd