web log free
December 08, 2025

திலினியின் வாகன மோசடி வழக்கு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு

காசோலை மோசடி தொடர்பாக திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுப்பதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதிகே இன்று (28) நிர்ணயம் செய்தார்.

தங்காலை பகுதியைச் சேர்ந்த சமித அனுருத்த என்பவருக்குச் சொந்தமான காரை மூடிய கணக்கிலிருந்து 80 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர் சமரசத்திற்கு தயாராக இருப்பதாகவும், அதற்கு இரண்டரை மாத கால அவகாசம் வழங்குமாறும் நீதிமன்றில் கோரினர்.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்ததுடன், சமரச தீர்வு தொடர்பில் இதுவரையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd