web log free
May 23, 2026

அனைத்து தேவாலயங்களிலும் ​இன்று ஞாயிறு திருப்பலி

கொழும்பு மறைமாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ​இன்று ஞாயிறு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என, கொழும்பு பேராயர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், பாதுகாப்புப் பிரிவினரால் அனைத்து தேவாலயங்களுக்கு அருகிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் இன்று திருப்பலிகளில் கலந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 2 வாரங்கள் தேவாலயங்களில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd