web log free
April 06, 2026

'கிழக்கு பல்கலைக்கழகத்தில் சோதனை'

கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இரண்டாவது தடவையாக இராணுவத்தினர் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கையினை மீள ஆரம்பிப்பதற்கு முன்னதாக சோதனை நடவடிக்கையை முன்னெடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாகத்தில் இராணுவத்தினரால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், பல்கலைக்கழக மாணவர் விடுதிகளும் சோதனையிடப்பட்டன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd