web log free
June 07, 2023

கடல் வழியே இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் கைது

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள், இலங்கைக்கு தப்பிச் செல்ல இருப்பதாக, 'கியூ' பிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. 

பொலிசார் நடத்திய சோதனையில், வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்த தூத்துக்குடி மாவட்டம் குளத்து வாய்பட்டி முகாம் கேனுஜன், 34, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவர் பள்ளி முகாம் ஜெனிபர் ராஜ்,23, தினேஷ், 18, புவனேஸ்வரி, 40, துஷ்யந்தன்,36,மற்றும் தனியார் விடுதியில் தங்கியிருந்த வேலூர், குடிமல்லூர் முகாம் சதீஸ்வரன்,32, ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், இலங்கைக்கு செல்ல, மயிலாடு துறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகிற்கு 17 லட்சம் ரூபாய் பேசி, பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 17 லட்சம் ரூபாயை பொலிசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.