web log free
June 07, 2023

IMF கடன் கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றம்...

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் எட்டப்படும் என அரசாங்கம் நம்புகிறது. இந்த ஒப்பந்தத்தின் பின்னர் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அரசவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"தாம் உட்பட பலருக்கு அமைச்சரவை பதவிகளை வழங்கி, ஜனாதிபதி விரைவில் அமைச்சரவையை மாற்றியமைப்பார் "என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவும் அண்மையில் தெரிவித்திருந்தார் மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சுப் பதவியைப் பெறுமாறு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தீர்மானித்த எஸ்ஜேபி பின்னர் போராட்டம் நடத்தும் யோசனையை கைவிட்டனர் எனவும் தெரிய வந்தது.