web log free
April 08, 2026

முகத்தை முழுமையாக மூடிய பெண் கைது

சிலாபம், ஜயபிம பகுதியில் இடம்பெற்ற மரண வீடொன்றுக்கு முகத்தை முழுமையாக மூடிய நிலையில் வந்திருந்த முஸ்லிம் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிரதேச மக்களால், சிலாபம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த பெண்ணின் கணவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் அன்று இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆள் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd