web log free
June 07, 2023

மஹிந்த ராஜபக்ஷ மீதான வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

மஹிந்த ராஜபக்ஷ மீதான வெளிநாட்டு பயணத்தடையை நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 10 நாட்களுக்கு வெளிநாட்டு பயணத்தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தற்காலிகமாக நீக்கியுள்ளது.

இன்று உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், 2023 ஏப்ரல் 20 முதல் 30 வரையிலான வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியது.

2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் மைதானத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே கோட்டை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தனது கட்சிக்காரர் தென்கொரியாவிற்கு செல்ல வேண்டியிருப்பதால், வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு மஹிந்த ராஜபக்சவின் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை கருத்தில் கொண்ட கோட்டை நீதவான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளார்.