web log free
June 05, 2023

கைக்குழந்தையை ரயில் மலசலகூடத்தில் கைவிட்டு சென்ற பெற்றோர் கைது

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள புகையிரதத்தின் மலசலகூடத்தில் விடப்பட்ட சிசுவின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

26 வயதுடைய திருமணமாகாத தம்பதிகள் இருவரும் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) இரவு 7.00 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த ரயிலில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் புகையிரத அதிகாரிகளும் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின் பெற்றோரை கண்டுபிடித்தனர்.

சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதால், குறித்த யுவதிக்கு குழந்தை பிறக்கப் போவதாக கேள்விப்பட்டதையடுத்து, அவரை அழைத்து வந்து கொழும்பு பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி, கடந்த 25ம் திகதி குழந்தை பெற்றுக் கொள்ளப்பட்டு, நேற்று குழந்தை ரயிலில் விடப்பட்டது.

பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.