எதிர்வரும் புதன்கிழமைக்குள் 500 மில்லியன் ரூபாவை தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றுக்கொள்ளாவிட்டால் தபால் மூல வாக்களிப்பு மேலும் தாமதமாகும் நாங்கள் அறிந்து கொண்டோம்.
புதன் கிழமைக்குள் இந்தப் பணம் கிடைக்காவிட்டால் தபால் மூலம் வாக்களிப்பதற்கான புதிய தேதியை அறிவிக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை தெரிவித்தார்.
மார்ச் 15 ஆம் திகதிக்குள் தேவையான தொகை கிடைக்காவிட்டால் மீண்டும் நீதிமன்றத்திற்கு சென்று பணம் கிடைக்காததை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கு தயாராகும் வகையில் இம்மாத இறுதிக்குள் ஆணைக்குழுவுக்கு திறைசேரியில் இருந்து 1100 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தேர்தலுக்கான பணத்தை வெளியிடுவதற்கான ஒப்புதலை நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பதிலுக்காக காத்திருப்பதாகவும் திறைசேரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனார்.