கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டை உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவ, பொகுந்தர பொருளாதார மத்திய நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்களுக்கே, கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் இவ்வாறு அபராதம் விதித்துள்ளது.
முட்டையின் கட்டுப்பாட்டு விலை 44 ரூபாவாக இருந்த போதிலும் 50 ரூபாவிற்கு விற்பனை செய்த 3 வர்த்தகர்களுக்கு தலா 3 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 210 ரூபா கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய வேண்டிய ஒரு கிலோ வௌ்ளை பச்சை அரிசியை 240 ரூபாவிற்கு விற்பனை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகருக்கு 3 இலட்சம் ரூபா அபராதத்தையும் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.