web log free
March 16, 2026

கொழும்பில் 10 மணிநேர நீர் வெட்டு

2023 மார்ச் 25 சனிக்கிழமையன்று கொழும்பின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக முற்பகல் 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

இதனால், கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே மற்றும் கடுவலை மாநகர சபை பகுதிகளுக்கும், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும்.

இந்த காலப்பகுதியில் கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபை மற்றும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களுக்கும் நீர் விநியோகம் தடைப்படும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd