web log free
January 07, 2026

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி விலை குறைப்பு செய்யப்பட்ட பொருட்களின் விவரம்

ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 199 ரூபாய்

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை, 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 210 ரூபாய்

ஒரு கிலோகிராம் கடலைப் பருப்பின் விலை, 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 298 ரூபாய்

ஒரு கிலோகிராம் உள்ளுர் உருளைக்கிழங்கின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 270 ரூபாய்,

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 119 ரூபாய்

தகரப் பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் மீனின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 520 ரூபாய்

ஒரு கிலோகிராம் கடலையின் விலை, 15 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 555 ரூபாய்

ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1100 ரூபாய்

ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை450 ரூபாய் 

ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் விலை 120 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1380 ரூபாய்

Last modified on Friday, 24 March 2023 07:13
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd