web log free
November 27, 2024

நிதி மோசடி செய்து தப்பிச் சென்ற குடும்பத்தை நாடு கடத்த உத்தரவு

இலங்கையில் பெருந்தொகை பணத்தை மோசடி செய்து கொண்டு சட்டவிரோதமாக தமிழகத்திற்னு தப்பிச் சென்ற தம்பதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த தண்டனையை இலங்கை சிறையில் அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகமட் சிகாப், பாத்திமா பர்சானா தம்பதியினர் பிரிவெல்த் குளோபல் என்ற நிதி நிறுவனத்தின் நாடு முழுவதும் ஆயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதியை சுருட்டிக் கொண்டு தமிழகம் தப்பிச் சென்றிருந்தார்.

அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து படகில் தப்பிச் சென்றனர். அவர்களை ஆட்கடத்திய வடமராட்சி வாசி சில வாரங்களின் முன் கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழகத்தில் சிக்கினார்.

அவர்கள் எந்த ஆவணங்களுமின்றி சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இரண்டு மாதங்கள் சிறை தண்டனையும், தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து வேதாரணியம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவர்கள் இருவரையும் உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்தி, இலங்கைச் சிறைகளில் இருவரின் தண்டனைக் காலத்தை அனுபவிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடியாளர்களை நாடு கடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ப்ரிவெல்த் குளோபல் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி தொடர்பாக இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கடந்தகாலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

மேலும் கருத்து தெரிவித்ததாவது.

தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டிற்கு வெளியிலும் எமக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கின்ற தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே எமது நாட்டில் தமிழ் பேசும் மாகாணமான கிழக்கு மாகாணத்தில் பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனம் என்ற பெயரில் 200 கோடி ரூபாவினை மோசடி செய்து கடல் மார்க்கமாக சட்டவிசோதமாக உங்கள் நாட்டிற்கு தப்பி ஓடிவந்து தற்போது திருச்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சிஹாப் சரீப் மற்றும் அவரது மனைவி பர்சானா மார்க்கார் இருவரும் தற்போது சிறையில் உள்ளார்கள்.

இவர்களது விசாரணைகள் அனைத்தும் அங்கு நிறைவு பெற்றிருப்பதாக நாம் அறிகின்றோம்.இதற்கு காரணம் இந்தியா தமிழ் நாட்டுடன் நாம் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளோம்.மேலும் 1400 குடும்பங்கள் இவர்களது நிதி நிறுவனத்தில் பண வைப்பு செய்து ஏமாற்றப்பட்டவர்கள்.தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மிக சிரமங்களை நாம் எதிர்கொள்கின்றோம்.

அத்துடன் பொருளாதார நெருக்கடியான இக்கட்டான சூழலில் எமது நாட்டிற்கு பல்வேறு உதவிகள் செய்து எமது மனங்களில் தற்போது இடம்பிடித்துள்ளீர்கள்.எனவே சர்வேதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மோசடியாளர்களை உங்கள் நாட்டில் தடுத்து வைத்துள்ளார்கள்.எனவே இவர்களை எமது நாட்டிற்கு நாடு கடத்தி எமது 1400 குடும்பங்களின் கண்ணீரை துடையுங்கள் என கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிட்டனர்.

நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த குறித்த நிதி நிறுவனம் கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் உள்ளடங்களாக கிளைகளை ஆரம்பித்து இஸ்லாத்தை முன்னிறுத்தி சில மௌலவிகளின் ஆசிர்வாதத்துடன் எமது மக்களை பகடைக்காய்களாக்கி ஏமாற்றியுள்ள இந்நிறுவனத்தின் கிளையில் பண வைப்பு செய்தவர்கள் சுமார் 1400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ப்ரிவெல்த் குளோபல் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பினை சேர்ந்த தலைவர் ஏ.றிஸ்வாட் செயலாளர் ஏ.றஸாக் உப தலைவர் ஐ.எம். பர்ஸாத் பொருலாளர் எம்.ஐ.எம் வகீல் ஆகியோர் குறிப்பிட்டனர்.

 மேலும் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி அடங்கலாக அரசின் முக்கியஸ்தர்கள் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd