மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான பல்வேறு குழுக்களை நியமித்து, ஜனநாயக மக்கள் பிரதிநிதித்துவ சபைகளை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுசெல்லும் நிலைமை காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதன்மூலம் மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கூறியுள்ளது.
இதேவேளை, தற்போது அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று(25) நடவடிக்கை எடுத்திருந்தார்.