web log free
November 27, 2024

40 எதிர்க்கட்சி எம்பிக்கள் ரணிலுக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன நேற்று (29) தெரிவித்தார்.

இந்த எம்.பிக்கள் குழு பல்வேறு வழிகளில் ஜனாதிபதியின் உடன்படிக்கையை வழங்கியுள்ளதாகவும் முன்னாள் எம்.பி. கூறினார். 

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்வார்கள் என தனக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாகவும் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த எம்.பி.க்கள் குழு அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, காலியில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களுக்குச் சென்று ஆர்ப்பாட்டங்களை நடத்தி வெளிநாட்டினரை பயமுறுத்தி சுற்றுலா வர்த்தகத்தை உடைக்க மக்கள் விடுதலை முன்னணி முயற்சிப்பதாகவும் லக்ஷ்மன் விஜேமான்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

மிரிஸ்ஸ மற்றும் யால பிரதேசங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி சுற்றுலா வர்த்தகத்தை சீர்குலைக்க ஜே.வி.பி தலைவர்கள் முயற்சித்ததாகவும் முன்னாள் எம்.பி. குறிப்பிட்டுள்ளார். 

கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்க முடியாத ஜே.வி.பி தலைவர்கள் பாசாங்குத்தனமாக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வந்துள்ள பணக்கார வெளிநாட்டவர்களால் சுற்றுலா விடுதிகள் நிறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd