ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் செயற்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனு தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த மனு இன்று அழைக்கப்பட்ட வேளையில், பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவிருந்தனர்.
எவ்வாறாயினும், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான திகதியை வழங்குமாறு கோரினர்.
இதன்படி, எதிர்மனுதாரர்களுக்கு ஆட்சேபனைகளை தெரிவிக்க மே 22ஆம் திகதி வரை நீதிமன்றம் அவகாசம் அளித்தது.