எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் உட்பட பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பலரும் இதற்கு வேரூன்றி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் பணியை அரசாங்கத்தில் பலம் வாய்ந்த பதவி வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருக்கும் போது அவரது தனிப்பட்ட ஊழியர்கள் சிலருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களில் பெரும்பாலான இளம் உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.