web log free
June 07, 2023

நாமல் குமார மற்றும் அமித் வீரசிங்க கைது

ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் என அறியப்படும் நாமல் குமார கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு வந்திருந்த நிலையில், நாமல் குமார, குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஹெட்டிபொல நகரில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது, நாமல் குமார அங்கு இருந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசேட பொலிஸ் குழுவினரால் கண்டியில் வைத்து மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.