பண்டிகைக் காலத்தில் கண்டி நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கண்டி தலைமையக பொலிஸார் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கண்டி நகரை சுற்றி மக்கள் தொடர்ந்து சுற்றித்திரிவதால் அவர்களின் பாதுகாப்பு கருதி இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, பணம், தங்கம் போன்றவற்றைக் கொள்ளையடிப்பதைத் தடுப்பதற்காக விசேட ரோந்துப் பிரிவினரும் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களும் களப்பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், கண்டி பொலிஸார் தலையிட்டு பொதுமக்களின் இடையூறுகளை தடுக்கவுள்ளனர்.
பொதுமக்களின் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் நகருக்கு வெளியே பிச்சைக்காரர்களை தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் முச்சக்கரவண்டி மற்றும் சுற்றுலா விடுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்கும் வகையில் இதன் கீழ் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.