web log free
June 27, 2026

நடு வீதியில் வைத்து முன்பள்ளி ஆசிரியை வெட்டிக் கொலை!

பேராதனை, கொப்பேகடுவ பகுதியில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவர் இன்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொப்பேகடுவ - கினிஹேன வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் இலுக்தென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்  முருதலாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

கொலைச் சம்பவத்தில் இன்னும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd