web log free
April 01, 2026

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேல்மட்டம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 11 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த ஆண்டு மே தினக் கொண்டாட்டத்தைப் புறக்கணிப்பதாக வெளியான செய்தியை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கட்சியின் கருத்துக்கு புறம்பாக செயற்படும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் மே தினமானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் பெருந்தொகையான மக்களின் பங்கேற்புடன் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்   தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd