பல்வேறு முறைகேடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரிப்பதற்காக இந்த ஆண்டு 420 அரச நிறுவனங்களின் தலைவர்களை பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழுவுக்கு (கோப் குழு) அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் நான்கு அரச நிறுவனங்கள் அடுத்த வாரம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளன.
இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை விமான சேவைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பனவே நான்கு நிறுவனங்களாகும்.
இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு என்பன COP குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தன. இந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் மீளவும் கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.