web log free
November 27, 2024

அதிக வெப்பத்தால் தோல் நோய் ஏற்படும் ஆபத்து

பல பிரதேசங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதாகவும், இதனால் சிறுவர்கள், முதியவர்கள், தோல் ஒவ்வாமை உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரலாம் எனவும்,  அனைவரும் கடும் சூரிய ஒளியில் இருக்க வேண்டாம் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேல், தெற்கு, கிழக்கு, வடமத்திய, குருநாகல், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் அதீத வெப்பம் தொடர்பில் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டுமெனவும், அதிக வெப்பத்தினால் தோல் நோய்கள் ஏற்படக் கூடுமெனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, வெள்ளை அல்லது வெளிர் நிற  ஆடைகளை அணிவது ஆகியவை வெப்பமான காலநிலையிலிருந்து பாதுகாக்க உதவும் என கருதப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd