web log free
December 11, 2025

வடக்கு கிழக்கில் ஹர்த்தால்!

ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழு ஹர்த்தால் நடத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி உரிமைகளை வேறு தரப்பினருக்கு வழங்குதல், வழிபாட்டுத் தலங்களின் பிரச்சனை, தொல்லியல் எச்சங்கள் என தமிழர்களின் நிலங்கள் சூறையாடப்படுவது உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து இந்த ஹர்த்தால் நடத்தப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். 

வடகிழக்கு மாகாணங்களில் முழு ஹர்த்தால் அன்றைய தினம் அனைத்து கடைகளையும் அடைத்து போக்குவரத்து நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அரச ஊழியர்களும் இந்த முழு ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 25ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், அன்றைய தினம் நாடாளுமன்றத்திலும் போராட்டம் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd